30 முறை அரசு தேர்வுகளில் தோல்வி அடைந்த ஐபிஎஸ் அதிகாரி தான் வெற்றி பெற்றது எப்படி என்பது குறித்து சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
மனிதராய்ப் பிறந்த பலர் ஏதாவது ஒன்றை தங்களது வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற இலட்சிய இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருப்பர். ஒரு சிலருக்கு மட்டுமே லட்சியம் இல்லாமல் ஏதாவது ஒரு வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றுமே தவிர, பெரும்பாலானவர்களுக்கும் ஏதாவது ஒரு கனவு, ஆசை கண்டிப்பாக இருக்கும். லட்சிய பாதையை நோக்கி கனவை நோக்கி பயணம் செய்பவர்கள் ஒரு குறிப்பிட்ட தூரம் வாழ்க்கையை கடந்து செல்லும் போது தொடர் தோல்விகளை சந்தித்தால், இதில் இனி வெற்றி அடைய முடியாது என்ற குருட்டு நம்பிக்கையில் முயற்சியை அப்படியே கைவிட்டு விடுவார்கள். ஆனால் அது தவறு என்பதை உணர்த்தும் விதமாக, தற்போது அசாத்திய வெற்றிபெற்ற பஞ்சாபின் இளம் ஐபிஎஸ் அதிகாரி ஆதித்யா தான் வெற்றி பெற்றது குறித்து சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், கடின உழைப்பு, பொறுமை, மன உறுதி இவை மூன்றும் தான் வெற்றியின் மந்திரங்கள் இந்த மூன்று விஷயங்கள்தான் தற்போது தன்னை இந்த இடத்தில் நிறுத்தியுள்ளது. தான் ஐபிஎஸ் அதிகாரி ஆவதற்கு முன்பாக, 30க்கும் மேற்பட்ட அரசு தேர்வுகளில் தோல்வி அடைந்துள்ளேன். தோல்வி அடைந்த நான் தற்போது இலக்கை அடைந்து வெற்றி பெற்ற மனிதராக திகழ்ந்து நிற்கிறேன். நீங்களும் வெற்றி பெற நினைத்தால் மேற்கண்ட மூன்று மந்திரங்களை மனதில் வைத்துக் கொண்டு உங்களது திட்டங்களை வெளியே சொல்லாமல் அதற்காக தைரியத்துடனும், மன உறுதியுடனும் தொடர் போராட்டம் நடத்துங்கள் கண்டிப்பாக வெற்றி பெறலாம் என தெரிவித்துள்ளார்.