Categories
உலக செய்திகள்

ஸ்பைடர்மேன் உடையணிந்த நபர்… சூப்பர் மார்க்கெட்டுக்குள் செய்த செயல்… வெளியான பரபரப்பு வீடியோ..!!

லண்டனில் ஸ்பைடர்மேன் உடையணிந்து சூப்பர் மார்க்கெட் ஒன்றில் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த பொதுமக்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் உள்ள Aada Clapham Junction சூப்பர் மார்க்கெட்டில் கடந்த வியாழக்கிழமை அன்று ஸ்பைடர்மேன் உடையணிந்து மர்மநபர் ஒருவர் இரவு நேரத்தில் திடீரென புகுந்து அங்கிருந்த பொதுமக்களை சரமாரியாக தாக்கியுள்ளார். அதில் ஆறு பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் நபர் ஒருவர் பதிவிட்ட வீடியோ காட்சியில் ஸ்பைடர்மேன் உடையணிந்த அந்த மர்ம நபர் பெண் ஊழியரை இரும்பு பொருளை கொண்டு தாக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது.

இதையடுத்து காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக 37 மற்றும் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரையும், 31 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரையும், 17 முதல் 18 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த சம்பவத்தில் காயமடைந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |