Categories
கிரிக்கெட் விளையாட்டு

7 அணிகளுக்கு சவால்… மீண்டும் கேப்டனான வார்னர்… கோப்பையை தட்டி தூக்குவோம்..!!

2020 ஐ.பி.எல். தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர், செயல்படுவார் என அந்த அணியின்  நிர்வாகம் அறிவித்துள்ளது.

கேப்டனாக மீண்டும் நியமித்தது குறித்து டேவிட் வோர்னர் கூறுகையில், ‘நடப்பு ஐ.பி.எல். தொடரில் கேப்டன் பதவி வழங்கப்படுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மீண்டும் ஒரு முறை அணியை வழிநடத்துவதற்கான வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.கடந்த 2 ஆண்டுகளில் அணியை வழிநடத்திய வில்லியம்சன் மற்றும் புவனேஷ்வர் குமாருக்கு நன்றி சொல்ல நான் விரும்புகிறேன்.

நீங்கள் ஒரு சிறந்த வேலையைச் செய்திருக்கிறீர்கள். ஆதரவு மற்றும் விளையாட்டு பற்றிய உங்கள் நுண்ணறிவு ஆகியவற்றிற்காக நான் உங்களிடம் சேர விரும்புகின்றேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அணி நிர்வாகத்திற்கு மீண்டும் ஒரு முறை நான் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் இந்த ஆண்டு ஐ.பி.எல் சம்பியன் பட்டத்தை கைப்பற்றுவதற்கு எனது மிகச் சிறந்த முயற்சியை நான் மேற்கொள்வேன்’ என கூறினார்.

Image result for david warner ipl

கடந்த 2016-ஆம் ஆண்டு சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்தவர் இருந்த டேவிட் வோர்னர். அந்த ஆண்டு வார்னர் தலைமையிலான அணி முதல்முறையாக சம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. அதன்பிறகு டேவிட் வார்னர், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி ஓராண்டு தடைபெற்றார். இதனால் 2018-ஆம் ஆண்டு முழுவதும் அவரால்  ஐ.பி.எல். தொடரில் பங்கேற்று விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் அவர் களமிறங்கினார். ஆனால் எனினும் அவருக்கு அணித்தலைவர் பதவி வழங்கப்படவில்லை. பந்தை சேதப்படுத்தியதால் தான் அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்படவில்லை என பேசப்பட்டது. அந்த தொடரில் சன்ரைசர்ஸ் அணி கேப்டனாக கேன் வில்லியம்சன் அணித்தலைவராகவும், புவனேஷ்வர் குமார் துணைத் தலைவராகவும் செயற்பட்டனர்.

கடந்த தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி தனது 14 லீக் போட்டிகளில் 6 வெற்றி, 8 தோல்விகளுடன் 12 புள்ளிகளை சேர்த்து பிளே ஓஃப் சுற்றுக்கு முன்னேறியது. எனினும், வெளியேறுதல் சுற்று போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்  அணியிடம் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது. தற்போது  அணித்தலைவராக டேவிட் வார்னர், மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதால் சன்ரைசர்ஸ் அணி சம்பியன் கோப்பைக்கு முத்தமிடுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும்  எழுந்துள்ளது.

வார்னர் கேப்டனாக இருந்தால் அவரது ஆட்டமே வேறு விதமாக இருக்கும். 2016 ஆம் ஆண்டு அவர் கேப்டனாக இருந்து கோப்பையை வெல்லும் போது பெரும் பங்கு அவருடையது என்று சொல்லலாம். கேப்டனாக இருந்து பேட்டிங், பீல்டிங்  இரண்டிலும் மிரட்டினார். ஆகவே இந்த முறை  மற்ற அணிகள் அவ்வளவு எளிதில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி விடமுடியாது. சரி இன்னும் 1 மாதம் தானே இருக்கிறது வெயிட் பண்ணி பாத்துருவோம்.

Categories

Tech |