Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“முகக்கவசம் நம் உயிர்கவசம்”… இதனை அணியாமல் வந்த 22 பேரிடம்… அபராதம் வசூலித்த போலீசார்…!!

திருநெல்வேலியில் கொரோனா ஊரடங்கை மீறி முகக்கவசம் அணியாமல் வெளியே வந்த 22 பேரிடம் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை தடுப்பதற்கு தமிழக அரசு தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனை கண்காணிக்க காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெருமாள்புரம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் தேவையின்றி வெளியே வந்த 22 பேரை காவல்துறையினர் எச்சரித்து அவர்களிடமிருந்து 200 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் எனவும், முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |