Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவி போட்ட மாஸ்டர் பிளான்…. கிசுகிசு-வில் சிக்காமல் தப்பிக்கும் “தளபதி”…. வெளியான தகவல்…!!!

நடிகர் விஜய் கிசுகிசுக்களில் சிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அவர்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் பல நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டுள்ளனர். இதில் கமல், ரஜினி, அஜித் ஆகியோரும் அடங்குவர். இதேபோல தளபதி விஜய் அவர்களும் முன்னணி நடிகை ஒருவருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டுள்ளார்.

நடிகர் விஜய்க்கு திருமணம் ஆன பிறகு அவர் நடித்த ஒரு சில படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த போது அவர் த்ரிஷாவுடன் இணைந்து நடித்த கில்லி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து விஜய்யும்,திரிஷாவும் இணைந்து திருப்பாச்சி, ஆதி, குருவி என  சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்தனர்.

வெற்றிகள் ஒருபுறமிருக்க அவர்களைப் பற்றி கிசுகிசுக்களும் அதிகம் பரவின. இதனால் விஜய் குடும்பத்தில் பல சண்டைகளும், குழப்பங்களும் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அவர்கள் சுமூகமாக பேசி ஒரு முடிவு எடுத்துள்ளனர். அது என்னவென்றால் தன் கணவர் விஜய் இனி த்ரிஷாவுடன் இணைந்து நடிக்க கூடாது என்றும் அவர் அடுத்தடுத்து நடிக்கும் படத்திற்கு தான் தான் கதாநாயகியை தேர்வு செய்வேன் என்றும் அவர் மனைவி கூறியுள்ளார்.

இதனை விஜயும் ஒப்புக் கொண்டுள்ளார். அன்றிலிருந்து இன்றுவரை நடிகர் விஜய் எந்த நடிகையுடன் நடிக்க வேண்டும் என்பதை அவர் மனைவி தான் தீர்மானித்து வருகிறார். இதனால்தான் விஜய் இன்று எந்த ஒரு நடிகையுடனும் இணைத்து கிசுகிசுக்கப்படவில்லை என்று நம்பப்படுகிறது.

Categories

Tech |