Categories
சினிமா தமிழ் சினிமா

இந்திய சினிமாவின் தலைசிறந்த படைப்பு…. “காந்தாரா” படத்தை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்…. வைரலாகும் பதிவு…..!!!!

கன்னட சினிமாவில் வெளியான காந்தாரா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. தொன்மை கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப் பட்டது. கடந்த 15-ஆம் தேதி காந்தாரா திரைப்படம் தமிழில் வெளியான நிலையில், ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தை நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்துள்ளார். இப்படம் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ள நிலையில், காந்தாரா படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது காந்தாரா படத்தை புகழ்ந்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தெரிந்த விஷயத்தை விட தெரியாத விஷயம் தான் அதிகம் என்பதை இதை விட யாராலும் சிறப்பாக சொல்ல முடியாது. எழுத்தாளர், இயக்குனர் மற்றும் நடிகர் ரிஷப் செட்டிக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இந்திய சினிமாவின் தலைசிறந்த படைப்பை கொடுத்த படப் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |