பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு சம புள்ளிகள் வழங்கப்பட்டது.
ஐ.பி.எல் 49 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழையின் காரணமாக போட்டி பாதிக்கப்பட்டு 11. 26 மணிக்கு போட்டி தொடங்கியது. இதனால் 5 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டது.
இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலியும், டிவிலியர்ஸும் களமிறங்கினர். விராட் கோலி அதிரடியாக விளையாடி 7 பந்துகள் 25 ரன்களும் (3 சிக்ஸர், 1 பவுண்டரி), டிவில்லியர்ஸ் 4 பந்துகள் 10 ரன்களும் எடுத்தனர். மேலும் பார்த்திவ் பட்டேல் 8, கிளாஸ்ஸன் 6, குர்கீரத் சிங் 6, பவன் நெகி 4 ரன்களும் எடுக்க இறுதியில் பெங்களூரு அணி 5 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 62 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் ஷ்ரேயஸ் கோபால் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். மேலும் தாமஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
இதையடுத்து 63 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சனும், லிவிங்ஸ்டனும் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய நிலையில் 4வது ஓவரில் சாஹல் வீசிய 2வது பந்தில் சாம்சன் 13 பந்துகளில் 28 ரன்கள் (3 சிக்ஸர், 2 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி ரத்து செய்யப்பட்டது. ராஜஸ்தான் அணி 3.2 ஓவரில் 1 விக்கெட் இழந்து 41 ரன்கள் எடுத்திருந்தது. லிவிங்ஸ்டன் 11 (7) ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனால் இரண்டு அணிகளுக்கும் சரிசமமாக 1 புள்ளிகள் வழங்கப்பட்டது.