பெற்றோர்களிடம் கட்டண வசூல் கேட்டு நிர்பந்தித்த தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்டு மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
கொரோனா பேரிடரால் நாடு முழுவதும் சிக்கி தவித்து வரும் இந்த நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பொருளாதாரம், மக்களின் வாழ்க்கை நிலையை கருத்தில் கொண்டு தான் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு தளர்வு பிறப்பித்துள்ளது. இதனிடையே பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, கல்வி கட்டண வசூல் போன்ற செயல்பாடுகளுக்கு மாநில அரசாங்கங்கள் அனுமதி அளித்திருந்தனர்.
அந்தவகையில் தமிழகத்திலும் பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கல்வி கட்டணங்கள் வசூலிக்கப்படுகிது.. அதே நேரத்தில் பெற்றோர்களை கட்டணம் வசூலிக்கக் நிர்பந்திக்க கூடாது என்று பல்வேறு நிபந்தனைகளை தமிழக அரசு விதித்திருந்தது. பள்ளிக் கல்வித் துறை இதற்கான நோட்டீசை அனைத்து மாவட்ட கல்வி நிலையங்களுக்கும் அனுப்பி இருந்தது.
ஆனாலும் பல பள்ளிகள் முழு கட்டணத்தை கேட்டு பெற்றோருக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இந்த புகாரை அடுத்து தமிழகம் முழுவதும் 18 தனியார் பள்ளிகளுக்கு உடனடியாக விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் இதற்கான நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.