Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாப்பாடு ரூ 20 ….. டிபன் ரூ 5 முதல் 15 … காபி ரூ 5 ….. மனைவிக்காக சாப்பாட்டு சேவை…!!

தனது மனைவி மும்தாஜ் நினைவாக ஷாஜகான் எப்படி தாஜ்மஹால் கட்டினாரோ அதே போல கோவையில் உள்ள சிங்காநல்லூரில் மனைவியின் நினைவாக அனைவருக்கு உணவு அளித்து வருகின்றார். கோவை – திருச்சி சாலையில் சிங்காநல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீனில் சாப்பிட சென்றால் உங்களுக்கு தெரியும்.சாந்தி கியர்ஸ் அதிபர்  என்றால் அனைவருக்கும் தெரியும். அவர் தான் இதனை நிறுவியர் பெயர் உயர்திரு பி.சுப்பிரமணியம் . தன்னுடைய மனைவியின் நினைவாக சாந்தி சோஷியல் சர்வீஸஸ் என்ற பெயரில் இந்த கேண்டீனை நடத்தி வருகிறார்.

இங்கு சாப்பிட  சென்றால் ஒரு நபருக்கு ரூபாய் 20/- மட்டுமே. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். பார்சல் கிடையாது. அருமையான சாப்பாடு. அங்கு வேலை செய்பவர்களிடம் இயந்திரம் தோற்றுப் போகும். அவ்வளவு வேகம். ஒரு நாளுக்கு மதிய வேளையில் 3000 நபர்களுக்கு சாப்பாடு தயார் செய்து விநியோகிப்பதாக தெரியவந்தது. தமிழகத்தில் தரமான உணவுகளை இவர்கள் அளவிற்கு எந்த உயர்தர உணவகமும் கொடுக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.

வெறும் ரூ.20-க்கு முழுச் சாப்பாடு, ரூ.5 முதல் ரூ.15-க்கு டிபன் வகைகள், பில்டர் காபி, டீ, ராகி பால், சத்து மாவு பால் என்று எதைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலும் விலை ரூ.5 தான். நாம் மூன்று வேளையும், கொலைப் பசியில் சாப்பிட்டாலும் பில் நூறு ரூபாய் ஆகாது. இதனால், இந்த பகுதியில் வாடகைக்கு வீடு கிடைப்பது அரிது. அங்கு குடியிருப்பவர்கள் அந்த வீடுகளில் சமையல் செய்வதும் கிடையாது.அதே போல ஏழைகள் மற்றும் முதியோர்களுக்கென தனி உணவு விடுதியுள்ளது. அங்கு அவர்களுக்கு இலவசமாகவே உணவு வழங்கப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.

உணவில் மட்டுமல்லாமல், கல்வி, பெட்ரோல், டீசல், பார்மஸி, டயாலிஸிஸ் சேவை, ரத்த வங்கி சேவை, கண் கண்ணாடி கடை, ரேடியோலஜி சேவை, ஆய்வு மையம், எரிவாயு எரியூட்டு மையம் என்று பல சேவைகளை செய்து வருகிறார்கள்.  இந்த வளாகத்திலுள்ள மருத்துவ ஆய்வகத்தில் எடுக்கப்படும் ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்டவை மற்ற மையங்களைவிட, 50 முதல் 70 % கட்டணம் குறைவு.இந்த அனைத்துப் புகழுக்கும் காரணம் இதன் நிறுவனர் சுப்பிரமணியம். ஆனால், வலது கை கொடுப்பது, இடது கைக்குத் தெரியக் கூடாது என்று சொல்வதைப் போல, இதுவரை தன்னை எங்கேயும் இவர் அடையாளப்படுத்திக் கொண்டது இல்லை.

Categories

Tech |