தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய தேவையான மளிகைக்கடைகள், பால், இறைச்சி கடை மட்டுமே திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விதிகளை பின்பற்றாமல் இறைச்சி விற்பனை செய்து வந்த கடைகள் சீல் வைத்து மூடப்பட்டுள்ளன. பொதுவாக ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான வீடுகளில் அசைவம் சமைத்து சாப்பிடுவார்கள். ஆகவே அன்றைய தினம் இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இதனை மீறி செயல்படும் இறைச்சிக் கடைகளுக்கு சீல் வைத்து 3 மாதங்கள் வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்டு வந்த ஆடு, கோழி இறைச்சிக் கடைகள் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவின்படி சீல் வைத்து 3 மாதங்கள் வரை மூடப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.