எலிமினேஷன் ஆன பின் வருண் மற்றும் அக்ஸ்ராவின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 ஆவது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சியில் ‘டிக்கெட் டூ பினாலே’ டாஸ்க் நடந்து வருகிறது.
மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இரண்டு முக்கிய போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆனார்கள். அவர்கள் வருண் மற்றும் அக்ஷரா. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியிலிருந்து எலிமினேஷன் ஆகிய பின் இவர்கள் முக்கிய நபர்களை சந்தித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.