Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமியை கர்பமாக்கிய கூலித்தொழிலாளி… புகார் அளித்த முதல் மனைவி… குடும்பத்துடன் போக்சோவில் கைது…!!

தேனி மாவட்டத்தில் கணவன் மனைவி விவாகரத்து வழக்கு நடந்து வரும் நிலையில் 17 வயது சிறுமியை 2-வதாக திருமணம் செய்து கொண்டு கர்பமாக்கிய கூலித்தொழிலாளி உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் கருவேல்நாயக்கம்பட்டி பகுதியில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் தெருவில் கூலித்தொழிலாளியான ராஜ்கமல்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரியா(25) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ராஜ்கமல் மற்றும் பிரியாவிற்கு தேனி நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில் ராஜ்கமல் 17 வயது சிறுமியை பெற்றோரின் சம்மதத்துடன் 2வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் அந்த சிறுமி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து பிரியா குழந்தைகள் நல குழுவில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய பின்னர் குழந்தை நலக்குழுவினர் தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி குழந்தை திருமணம் தடுப்பு சட்டம், போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் ராஜ்கமல், அவரது தந்தை இளங்கோவன், சிறுமியை பெற்றோர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கர்ப்பமான சிறுமியையும் மீட்டுள்ளனர்.

Categories

Tech |