Categories
மாநில செய்திகள்

நெல்லை, தூத்துக்குடி, உள்ளிட்ட 18 மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழை..!!

தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, உள்ளிட்ட 17 மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் நேற்று சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.. இந்நிலையில் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் சிவகங்கை, மதுரை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், காரைக்கால் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று முதல் 24ஆம் தேதி வரை 3 நாட்கள் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

மேலும் சென்னையில் அடுத்த 2 நாட்களில் மிதமான மழை பெய்யலாம் என்றும், அடுத்த 3 நாட்களுக்கு தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது..

Categories

Tech |