Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கன மழைக்கு வாய்ப்பு… இந்த மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம்..!!

கேரளாவில்  ஒரு  மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.

கேரளாவில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக கொச்சியின் பல்வேறு இடங்களில் குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல பாய்ந்தோடுகிறது. இதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கோட்டயம் ,எர்ணாகுளம், திரிசூர் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு  “ஆரஞ்சு அலர்ட்” எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

மிக அதிக கனமழை பெய்யும் என்பதால், அதிகாரிகள் தேவையான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதை ரெட் அலர்ட் எச்சரிக்கை குறிக்கிறது. அதேபோல், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை  என்றால்,  மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது ஆகையால் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை நிர்வாக ரீதியாக அறிவிக்கப்படும் அறிவுறுத்தல் ஆகும்.

ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திரிசூர் போன்ற மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் கேரள கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |