இணையதளத்தை உபயோகப்படுத்த ராணுவ வீரர்களுக்கு அனுமதி கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது
சமூக வலைத்தளங்களான “பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை ராணுவ வீரர்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காஷ்மீரில் பணியாற்றும் ராணுவ அதிகாரியான பி.கே.சவுத்ரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அம்மனுவில் ராணுவ வீரர்கள் அனைவரும் தங்களது குடும்பங்களை பிரிந்து தொலை தூரங்களில் கடினமான நிலப்பரப்பு மற்றும் வானிலையில் பணிபுரிகிறார்கள்.
இச்சூழ்நிலையில் குடும்பங்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான சமூக வலைத்தளங்களை பயன்படுத்தக்கூடிய நிலை உள்ளது. அதுமட்டுமன்றி சமூக வலைத்தளங்கள் குடும்பத்தின் இடைவெளியை ஈடு செய்யக் கூடியதாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ராணுவ வீரர்களுக்கு விதித்துள்ள இக்கொள்கையை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று ராணுவ புலனாய்வு பொதுத்துறை இயக்குனருக்கு உத்தரவு கூற வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். இத்தகைய மனுவானது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.