சாலையில் சென்று கொண்டிருந்த மினி லாரியானது திடீரென செயல்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியில் வசிக்கும் பிரசாத் என்பவர் மினி லாரியில் உர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு மணிகண்டன் என்பவரின் நிலத்தில் இறக்கி விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்திருக்கிறார். இதனையடுத்து சாலையின் வளைவு பகுதியில் மினி லாரி வந்து கொண்டிருக்கும் போது திடீரென செயல்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் படுகாயமடைந்த கோபி சம்பவ நடந்த இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து படுகாயமடைந்த பிரசாத் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.