பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆளுநரின் செயலாளர் கலந்தாலோசிக்க உள்ளார் என்ற பதிவாளர் நோட்டீஸ் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கோபிநாத் நேற்று ஒரு நோட்டீஸ் வெளியிட்டிருந்தார். அதில் பல்கலைக்கழகத்தில் இன்று மாலை 6 மணிக்கு ஆய்வு கூட்டம் நடைபெற இருக்கின்றது. இதில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் அனைவருமே பங்கேற்கவேண்டும்.
ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் கலந்தாலோசிக்க இருப்பதால் அனைவரும் தங்களது ஆடைகளை ( டிரஸ்சிங் ) நல்லமுறையில் போட்டுக் கொண்டு வரவேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருந்தது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.பொதுவாக உயர்கல்வித்துறை செயலாளர் , உயர்கல்வித் துறை அமைச்சரோ தான் கலந்தாலோசிப்பது வழக்கமான ஒன்றாக இருக்கும்.ஆனால் ஆளுநரின் செயலாளர் சென்று கலந்தாலோசிப்பது இதுவே முதல் முறை.
இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் எதுமே தெரியாது என்பது கல்வியாளர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. என்று பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கொடுத்திருப்பது ஒரு வித்தியாசமான ஒன்றாக உள்ள நல்லது இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.