Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் நலன் கருதி… மாவட்ட கலெக்டர் தலைமை… அமைச்சரின் செயல்…!!

2-ஆம் தவணை நிவாரண தொகையும், திருமணத்திற்கு தங்கமும் அமைச்சர் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 653 நியாயவிலைக் கடைகள் மூலமாக 3, 66, 347 குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் 2-ஆம் தவணை நிவாரண தொகையாக 2000 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அருகில் அமைந்திருக்கும் நியாயவிலை கடைகளில் கூட்டுறவுத் துறை சார்பாக நிவாரணத் தொகையின் 2-ஆம் தவணையின் 2000 ரூபாய் மற்றும் 14 வகை அத்தியாவசிய  பொருட்கள் போன்றவற்றை பொதுமக்கள்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்துள்ளார். இதனை அடுத்து ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2-ஆம் தவணை நிவாரண தொகையான 2,000 ரூபாயையும், 14 வகை அத்தியாவசிய  பொருட்கள் அடங்கிய தொகுப்புகளையும் முதலில் வழங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து திருமண நிதியுதவி பெறும் திட்டத்தின் கீழ்,தாலிக்கு தங்கமும் வழங்கியுள்ளனர். அதன் பின் நலவாரிய அட்டை வைத்துள்ள 3 பாலின இனத்தைச் சார்ந்த 30 நபர்களுக்கு 60,000 மதிப்பீட்டில் கொரோனா நிவாரண தொகை 2000 ரூபாயை வழங்கியுள்ளனர். மேலும்  சத்தியவாணிமுத்து அம்மையாரின் நினைவை முன்னிட்டு தையல் எயந்திரம் திட்டத்தின்கீழ், இம்மாவட்டத்தில் வசிக்கும் 52 பணியாளர்களுக்கு இலவச தையல் எயந்திரங்களை அமைச்சர் வழங்கியுள்ளார்.

Categories

Tech |