Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சர் சொல்லி இருக்காரு… பிரச்சனை முடிந்து விட்டது… நாசுக்கா பதிலடி கொடுத்த ஜெயக்குமார் …!!

பாஜகவின் வானதி சீனிவாசன் ட்விட் பதிவு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் நாசுக்காக பதிலளித்தார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இறப்பை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை முதலைமைசர் சேலத்தில் பேட்டி கொடுத்தார். உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு கிடையாது. அமெரிக்கா, ஸ்பெயினில், பிரான்ஸ், சவுத்ஆப்பிரிக்கா இப்படி எல்லா நாடும் எப்படி புள்ளி விவரம் கொடுக்கின்றதோ அதே  அடிப்படையில் தான் இந்தியாவும் புள்ளி விவரம் கொடுக்கிறாங்க.

இந்தியாவில் மொத்தம் எத்தனை கேஸ்,  தமிழ்நாட்டில் எத்தனை, மஹாராஷ்டிராவில் எத்தனை ? எவ்வளவு சோதனை செய்துள்ளோம் ? எவ்வளவு பேருக்கு பாசிட்டிவ், எவ்வளவு அட்மிசன், எவ்வளவு டிஜார்ஜ், எவ்வளவு சதவீத இறப்பு என தினமும் கொடுக்கும் போது மறைக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கு ? இதனால என்ன நன்மை அரசாங்கத்துக்கு சொல்லுங்க… ஒன்னும் கிடையாது.

சுகாதாரத்துறை செயலாளர் மாற்றப்பட்டது அரசாங்கத்தின் வழக்கமான நிர்வாக நடவடிக்கை. நிர்வாக நடவடிக்கையை யாரும் கேள்வி கேட்க முடியாது. பத்திரிக்கையாளர் வரதராஜன் மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை என்று வீடியோ வெளியிட்டார். அது தவறு என்று சொல்லி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது . பாஜகவின் வானதி சீனிவாசன் அவர்கள் நேற்று ஒரு ட்விட் போட்டாங்க.

ஓமந்தூரார் மருத்துவமனையில் படுக்கை வசதியில்லை,  ஏற்படுத்தி தரவேண்டும் என்று ட்விட் போட்டு அமைச்சரை டக் செய்துள்ளார். அவர்கள் மீது ஏதும் நடவடிக்கை எடுக்கப்படுமா ? என்ற கேள்விக்கு, வானதி சீனிவாசன்  திருப்ப ரீட்வீட் போட்டு இருக்காங்க. அரசுத் துறை நடவடிக்கை எடுத்திருக்கு என்று… பிரச்சனை முடிந்து விட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பதில் கொடுத்துள்ளார். அந்த பதிலே போதும் என்று முடித்துள்ளார்.

Categories

Tech |