சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய பாஜக அரசு, தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டே இருக்கின்றது. அதிமுக அவுங்க கட்சி இருக்கா ? இல்லையான்னே தெரியாத அளவுக்கு போயிடுச்சு. ஏன்னா பாஜக கையில தான் அதிமுகவோட குடுமி இருக்கு. அதுவும் சொல்லணும்னா…
குறிப்பிட்டு சொல்லணும்னா… கடந்த ஓராண்டுல கிட்டத்தட்ட மாதத்துக்கு ஒருமுறை இந்த துறைமுகம் பகுதிக்கு, கிழக்கு மாவட்டத்திற்கு நான் வந்து கொண்டிருக்கின்றேன். எனக்கே சில நேரம் சந்தேகம் வந்துரும். நான் எந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்று… சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி அல்லது துறைமுகமாகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரா என்று..
இன்னைக்கு சேகர்பாபு அண்ணன் துறைமுகம் தொகுதி என்று நியாபகப்படுத்துவதற்காக கப்பல் பொம்மை எல்லாம் கொடுத்திருக்கிறார் நினைவு பரிசாக… இந்த நிகழ்ச்சியில் என்னிடத்தில் அழைத்து, நீங்க துவக்கி வைக்க வரணும் என்று கட்டளையிட்டார். வழக்கம் போல் நானும் வந்திருதேன் அண்ணே என்று சொன்னேன்.
இங்க தயாநிதி மாறன் அவர்கள் பேசும்போது சொன்னார்கள், தயவுசெய்து நிகழ்ச்சியை உள் அங்குல நடத்துங்க, மழைக்காலம் அப்படின்னு சொன்னாரு. சேகர்பாபு அண்ணன் நினைச்சா, மழையை கூட நிப்பாட்டிராரு. ஏனென்றால், அவர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்ல. எனக்கு நம்பிக்கை இல்லை, சொல்றேன். இருந்தாலும் எனக்கு இன்னைக்கு மதியம் தொலைபேசியில் அழைத்து ஞாபகப்படுத்தினார்.
நான் கேட்பதும் முன்னாடி அவரே சொல்லிட்டாரு, ரெண்டு இடத்துல ஏற்பாடு பண்ணி இருக்கு. மழை பெஞ்சா இன்னொரு இடம், மழை பெய்யவில்லை என்றால் இன்னொரு இடம் அப்படின்னு சொன்னாரு என தெரிவித்தார்.