கடினமான பொருளாதார கருத்துகளை பொதுமக்களுக்கு எளிமையாக விளக்கும் வகையில் #ArthShastri என்ற பரப்புரையை நிதி அமைச்சகம் வரும் ஜனவரி 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தப் பரப்புரைத் திட்டத்தின் கீழ், கடினமான கருத்துகளும் எளிமையாக மக்களுக்குப் புரியும்படி அனிமேஷன் காணொலிகளை நிதி அமைச்சகம் வெளியிடும். கடந்த ஆண்டும் இதேபோன்ற திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த தகவல்களை நிதி அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்தப் பரப்புரை வரும் ஜனவரி 29ஆம் தேதிவரை நடத்தப்படும். 2020-2021ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல்செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Curious student Arth unpacks his box of questions in Prof. Shastri’s class. Let’s see how Dr. Shastri tackles his difficult questions with her sharp insight. Tune into this space to join the classes starting 22nd January @ 11am. #ArthShastri pic.twitter.com/XhQKaGBzsQ
— Ministry of Finance (@FinMinIndia) January 19, 2020