Categories
தேசிய செய்திகள்

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்… “இனி கல்வி அமைச்சகம்”… பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கிய ஜனாதிபதி…!!

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கல்வி அமைச்சகமாக பெயர் மாற்றப்பட்டதற்கு ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கியம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதேபோல், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பெயரை மத்திய கல்வித்துறை அமைச்சகம் என மாற்றி வைப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த கூட்டத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் பெயரை கல்வி அமைச்சகம் என மாற்றப்பட்டதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

 

Categories

Tech |