Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மரம் நடும் போது நிகழ்ந்த அதிசயம்…….. ஆராச்சியில் தொல்லியல்துறை…… இளைஞர்களுக்கு குவியும் பாராட்டு…..!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உள்ள முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்து உள்ள  பெரிய கண்மாய் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பொழுது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய முதுமக்கள் தாழியை இளைஞர்கள் சிலர் கண்டுபிடித்துள்ளனர். இதனை கண்ட கண்டுபிடிப்பாளர்கள் காவல் துறை மூலமாக தொல்லியல் துறைக்கு தகவல் அனுப்பினர். இதையடுத்து முதுமக்கள் தாழி குறித்து அகழ்வாராய்ச்சி நடத்தப்படும் என அரசு அருங்காட்சியக காப்பாளர் தெரிவித்தார். மேலும் இதனை கண்டெடுத்த இளைஞர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்த  வண்ணம்  உள்ளன. 

Categories

Tech |