விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று அயல்நாட்டு முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும் நாளாக இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஆடைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டை விரிவுபடுத்தும் முயற்சி வெற்றியை கொடுக்கும். கலை துறையை சார்ந்தவர்கள் கொஞ்சம் கோபம் அதிகரிக்கும். உடன் இருப்பவரிடம் கருத்து வேற்றுமை வராமல் இருக்க, மனம் விட்டு பேசுவது ரொம்ப நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.
சூழ்நிலையை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் செயல்படுங்கள். மற்றவரை தயவுசெய்து காயப்படுத்த வேண்டாம். பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள். இன்று விலை உயர்ந்த பொருட்களை ரொம்ப கவனமாக தான் நீங்கள் கையாள வேண்டியிருக்கும். அதேபோல காதலர்கள் இன்று கடுமையாக பேச்சுவார்த்தையை குறைத்துக் கொள்ள வேண்டும்.
பேசும்பொழுது கடுமை காட்டாமல் நடந்து கொள்ளவேண்டும். பொறுமை இருந்தால் மட்டுமே இன்று அனைத்து விஷங்களிலும் நீங்கள் வெற்றிபெற முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்