துறவி ஒருவர் பாம்புகளை தன்னுடைய வாரிசுகளாக வளர்த்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மரை சேர்ந்த புத்தமத துறவி விலாதா(69). இவர் தன்னுடைய வீடு உள்ளிட்ட இடங்களில் பிடிபடும் பைத்தான், பைபர், கோப்ரா உள்ளிட்ட பாம்புகளை வாங்கி வந்து யான்கூனில் உள்ள ஆசிரமத்தில் வைத்து வளர்த்து வருகிறார். இது குறித்து கூறும் இவர், பாம்புகள் கொல்லப்படுவதை தவிர்ப்பதற்காகவும், சீன பாரம்பரிய மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பதை தடுப்பதற்காகவும் தான் இதுபோல செய்வதாக தெரிவித்துள்ளார்.
அவர் பாம்புகளைக் கண்டு பயப்படாமல் தோளில் மாலையாக போட்டு அமர்கிறார். பாம்பை கொண்டு நாம் பல சாகசங்களை பார்த்திருக்கிறோம். அதிலும் கொடிய விஷம் கொண்ட பாம்புகளில் சாகசங்கள் மனிதர்களிடையே ஒருவித அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தும். ஆனால் இவர் பாம்புகளை தன்னுடைய வாரிசுகளாக பாவித்து வளர்த்து வருகிறார்.