Categories
உலக செய்திகள்

தீவில் தவித்தவருக்கு உதவிக்கரம் நீட்டிய மனித குரங்கு – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

இந்தோனேசியாவில் சகதியில் சிக்கிய ஒருவருக்கு  மனித குரங்கு ஒன்று உதவும் மனதுடன் தனது கரங்களை நீட்டிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் அழிந்து வரும் மனித குரங்குகளை பாதுகாப்பதற்காக தனியார் அமைப்பு ஒன்று அந்த காட்டில்  உலவும் பாம்புகளை பிடித்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அந்த அமைப்பை சேர்ந்த ஊழியர் ஒருவர் எதிர்பாராதவிதமாக குட்டையில்  தவறி விழுந்து விட்டார். இடுப்பளவு சகதி நிரம்பி இருந்த அந்த குட்டையில் அவர்  சிக்கிக்கொண்டார்.

அப்போது அந்த வழியாக வந்த மனித குரங்கு ஒன்று சகதியில் சிக்கி நின்ற ஊழியருக்கு உதவுவதற்காக கைநீட்டியது.

இந்த உருக்கமான காட்சியை  அவருடன்  பயணம் மேற்கொண்டிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |