காமெடி நடிகர் யோகி பாபுவிற்க்கு மகன் பிறந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறுகிய கால இடைவெளியில் தன்னுடைய திறமையான உச்சத்தை தொட்ட முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் யோகிபாபு. இவர் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை எளிமையாக திருத்தணி முருகன் கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். திருமண வரவேற்பு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் யோகிபாபு மனைவி கர்ப்பமாக இருந்தார். இதையடுத்து தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், மகனும் நலமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவர் தற்போது தந்தை ஆகியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று கூறியுள்ளார்