Categories
இந்திய சினிமா சினிமா

“இந்திய அளவில் மிக பிரபலமான நடிகர்கள்”… முதலிடத்தில் பிரபல தமிழ் நடிகர்…. டாப் 10 லிஸ்ட் இதோ….!!!!!

இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் 10 நடிகர் மற்றும் நடிகைகளின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இந்த லிஸ்ட்டை ஐஎம்டிபி இந்தியா 2002 வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்டின் படி இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் நடிகர் தனுஷ் முதல் இடத்தை பிடித்துள்ளார். அதன் பிறகு 2-ம் இடத்தில் நடிகை ஆலியா பட்டும், 3-ம் இடத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயும், 4-ம் இடத்தில் நடிகர் ராம் சரணும், 5-ம் இடத்தில் நடிகை சமந்தாவும் இருக்கின்றனர்.

இதனையடுத்து 6-ம் இடத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், 7-ம் இடத்தில் நடிகை கியாரா அத்வானியும், 8-ம் இடத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆரும், 9-ம் இடத்தில் நடிகர் அல்லு அர்ஜுனும், 10-ம் இடத்தில் கேஜிஎஃப் புகழ் நடிகர் யஷ் இருக்கின்றனர். மேலும் இந்திய அளவில் பிரபலமானவர்களில் தமிழ் நடிகரான தனுஷ் முதலிடத்தில் இருப்பது மிகவும் பெருமையான ஒரு விஷயமாகும். ஆனால் விஜய் மற்றும் அஜித் போன்ற பெரிய நடிகர்கள் லிஸ்டில் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |