குரங்கு ஒன்று நாய் குட்டியை தன்னுடைய குழந்தை போல பார்த்துக்கொண்ட காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடலூரிலுள்ள திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே குரங்கு ஒன்று வெகுநாட்களாகவே நாய்க்குட்டி ஒன்றைத் தூக்கிக் கொண்டு அலைந்து கொண்டிருந்துள்ளது. மேலும் தனக்கு கிடைக்கும் உணவுகளை எல்லாம் அந்த நாய் குட்டிக்கும் கொடுத்து, ஒரு தாயைப் போல வளர்த்து வந்துள்ளது. ஒரு வினாடி கூட நாய்க்குட்டியை அந்த குரங்கு தனியாக விட்டு செல்லாமல் இருந்துள்ளது.
இந்நிலையில் அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள், குரங்கிடம் இருந்து நாய்க்குட்டியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சற்றும் தளராத அந்த குரங்கு நாய் குட்டியை கீழே இறக்காமல் இருந்துள்ளது. அதன் பிறகு ஒரு மணி நேரத்திற்கு பிறகு குரங்கிடம் இருந்து நாய்க்குட்டியை பிடித்துள்ளனர். குரங்கு மற்றும் நாய் குட்டிக்கு இடையே இருந்த பாசத்தை மக்கள் வியப்புடன் பார்த்து சென்றுள்ளனர்.