Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“குழந்தை தொடர் அழுகை” மூச்சு திணற திணற கொடூரமாக கொன்ற தாய்…… வேலூரில் பரபரப்பு…!!

வேலூரில் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததன் காரணமாக தாயே பெற்ற குழந்தையை கொடூரமாக மூச்சு திணற கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பவித்ரா. இவருக்கு திருமணமாகி ஓராண்டு முடிந்த நிலையில், ஒரு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவரது குழந்தை பெயர் மௌனிகா. இவரது கணவர் நேற்றைய தினம் வேலைக்கு சென்றிருந்த சமயத்தில் வீட்டில் பவித்ரா அவரது குழந்தையுடன் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.

அப்பொழுது  ஒரு வயது குழந்தையான மௌனிகா தொடர்ந்து அழுது கொண்டு இருந்துள்ளார். பெண் குழந்தையை சமாதானப்படுத்த பவித்ரா முயற்சித்தும், குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது. இதனால் எரிச்சலடைந்த பவித்ரா தனது ஒரு வயது குழந்தையை இரக்கமின்றி துப்பட்டாவால் முகத்தை அழுத்தி மூச்சு திணற திணற கொடூரமாக கொலைசெய்து உள்ளார்.

குழந்தை மரணம் குறித்து பவித்ரா மூடிமறைக்க நினைத்த பொழுது அக்கம் பக்கத்தினருக்கு விஷயம் தெரியவர இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பவித்ராவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |