தன் மகளின் படுக்கையறையை எட்டி பார்த்த இளைஞரை துரத்தி சென்று தாய் பிடித்துள்ள சம்பவம் பாராட்டுகளை பெற்றுள்ளது.
அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் மகள் படுக்கை அறையில் உறங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த பெண் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு இளைஞர் வீட்டில் தன் மகனின் படுக்கை அறையை எட்டிப் பார்த்ததை கண்டு கோபமடைந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் அந்த நபரை விரட்டி அவரை விரட்டி மடக்கி பிடித்து உள்ளார். ஆனால் அந்த வாலிபர் அங்கிருந்து ஓடி சென்றுள்ளார்.
இருப்பினும் அந்த நபரை பிடிப்பதிலேயே குறியாக இருந்த பெண் அவரை துரத்தி சென்று பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், “என் குழந்தை தான் என்னுடைய உலகம். அவளை காப்பாற்றுவது என்னுடைய கடமை, அவளுக்காக நன் என்ன வேண்டுமானாலும் செய்வேன்” என்று கூறியுள்ளார்.