Categories
தேசிய செய்திகள்

சம்சா வாங்கிய சிறுவன்… திட்டிய தாய்… பின் நடந்த சோகம்..!!

சம்சா வாங்கியதை தாய் கண்டித்ததால் 11 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் சாகு. இச்சிறுவனின் குடும்பம் கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் தொழில் செய்ய முடியாமல் உணவுக்கு கஷ்டப்படும் சூழலில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஏழாம் வகுப்பு படித்து வந்த சாகு தாயிடம் அனுமதி வாங்காமல் வீட்டிலிருந்த பத்து ரூபாயை எடுத்து சென்று சமோசா வாங்கி வந்துள்ளார். அதனை சாகுவின் மூத்த சகோதரர் சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த பணத்தை கேட்காமல் எடுத்துச் சென்ற குற்றத்திற்காக ராகுவின் தாய் கடுமையாக திட்டியுள்ளார்.

இதில் மனமுடைந்து விரக்தியடைந்த சிறுவன் சமையலறைக்குள் சென்று மின்விசிறியில் தாயின் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டான் இதனை கண்ட சாகுவின் தாய் கதறி அழுதுள்ளார். பின்னர் இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க அவர்கள் தற்செயலான மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர். தாய் திட்டியதால் 11 வயது சிறுவன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |