இந்தோனேசியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை மெராபி மவுண்ட் (Mount Merapi) எரிமலை வெடித்து சிதறியதில் அடர்த்தியான சாம்பல் ஆறு கிலோமீட்டர் உயரத்திற்கு சென்றது.
இந்தோனேசியாவில் உயிர்ப்புடன் உள்ள நூற்றுக்கணக்கான எரிமலைகளில் ஒன்றான 2,930 மீட்டர் உயரமுள்ள மவுண்ட் மெராபி எரிமலை அவ்வப்போது வெடித்து சிதறி வருகிறது.கடந்த செவ்வாய்க்கிழமை எரிமலை வெடித்து சிதறியதில் அடர்த்தியான சாம்பல் 6 கிமீ உயரம் சென்றது.
எரிமலை வெடித்ததால், அப்பகுதியில் இருக்கும் குடியிருப்புகளில் கரும்புகை சூழ்ந்ததுடன், வெப்பத்தின் தாக்கம் உணரப்பட்டது. எரிமலை வெடிப்பின் போது மழை இடையில் குறுக்கிட்டதால் லாவா குழம்புகளால் ஏற்படும் பாதிப்பு முற்றிலும் தவிர்க்கப்பட்டது.