தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜீவா. இவர் நடிப்பில் அண்மையில் காபி வித் காதல் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் ஜீவா நடித்துள்ள வரலாறு திரைப்படமானது டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் காஷ்மிரா பர்தேசி கதாநாயகியாக நடிக்க, விடிவி கணேஷ், கே.எஸ் ரவிக்குமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்பி சவுத்ரி தயாரிக்கும் வரலாறு படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் ஜீவா பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, சினிமாவை ரசிகர்கள் வெறும் பொழுதுபோக்காக மட்டும்தான் பார்க்க வேண்டும். ஏனெனில் சினிமாவில் எதுவும் நிஜமில்லை என்பது அனைவருக்கும் தெரியும். சினிமாவை பார்த்து ரசிகர்கள் உத்வேகமாக மாற வேண்டுமே தவிர விபரீதமாக முடிவெடுக்கக்கூடாது என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் ஜீவாவின் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.