Categories
தேசிய செய்திகள்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி தீர்ப்பு நாளை வெளியாகிறது …..!!

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை காலை 10.30க்கு வழங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகிவுள்ளது.

நாடே பெரிதும் எதிர்பார்க்கும் சர்ச்சைக்குரிய ராம் ஜன்ம பூமி – பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகவுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தொடர் விசாரணையை மேற்கொண்டது.

40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் நவம்பர் 17ஆம் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பு தீர்ப்பு வெளியாகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

Image result for அயோத்தியா

மேலும், நாடு முழுவதும் சட்ட ஒழுங்கை சீராக வைத்துக்கொள்ள தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், உத்தரப் பிரதேச மாநில காவல்துறைத் தலைவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து நிலைமை குறித்து விளக்கமளித்தார்.

இந்நிலையில், அயோத்தி சர்ச்சை நிலம் தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்பானது நாளை காலை 10.30க்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தீரப்புக்குப்பின் எந்தவித கொண்டாட்டமோ, துக்கமோ அணுசரிக்கும் விதத்தில் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ள கூடாது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தொடங்கி, ஆளும் பாஜக தலைவர்கள், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் என பல்வேறு தரப்பைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள் அனைவரும் நீதிமன்ற தீர்ப்பை மதித்து அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Categories

Tech |