பிரபல ஹிந்தி நடிகர் சல்மான்கான் தனது நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கான் கொரோனா முடக்கத்தின் போதும் உலகில் உள்ள பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு பொதுமுடக்கத்தால் உணவின்றி தவித்து வரும் மக்களுக்கு தனது ஏற்பாட்டில் வாகனங்கள் மூலம் உணவளித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் சொந்த ஊர் செல்ல முடியாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் இவர் உதவி செய்துள்ளார்.
தற்போது சல்மான் கான் பாட்டு பாடுவதில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தனக்கு சொந்தமான நிலத்தில்இறங்கி விவசாய பணிகளில் ஈடுபட்டு, அனைத்து விவசாயிகளையும் மதியுங்கள் என கூறி உடல் முழுவதும் சேற்றுடன் உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, அதனுடன் சேர்ந்து விவசாய பயிர்களை கையில் வைத்துக் கொண்டு அவர் நிற்கும் மற்றொரு புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை சல்மானின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.