Categories
கிரிக்கெட் விளையாட்டு

தனி ஆளாக அடித்த பொல்லார்ட்….. சன்ரைசர்ஸ் அணிக்கு 137 ரன்கள் இலக்கு..!!

மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் அணிக்கு 137 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. 

ஐ.பி.எல் கிரிக்கெட்  தொடரில் ஹைதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கிய 19வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், புவனேஷ்வர்குமார் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக பொல்லார்ட் 26 பந்துகளில் 46 ரன்கள் (4 சிக்ஸர், 2 சிக்ஸர்)  குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக சித்தார்த் கவுல் 2 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார், சந்தீப் சர்மா, முகமது நபி, ரஷித் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களான ஜானி பேர்ஸ்டோவும், டேவிட் வார்னரும் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

Categories

Tech |