மும்பை அணி 13 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்து திணறி வருகின்றது.
ஐ.பி.எல் தொடரின் மூன்றாவது போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும் , டெல்லி கேப்பிடல் அணியும் மோதும் போட்டி மும்பை_யில் உள்ள வான்கேட் மைதானத்தில் நடைபெறுகின்றது . டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததையடுத்து டெல்லி கேப்பிட்டல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா , ஷிகார் தவான் களமிறங்கினர். ப்ரித்வி ஷா 7 ரன்னிலும் , ஷ்ரேயஸ் ஐயர் 16 ரணிலும் ஆட்டமிழக்க ஷிகார் தவானுடன் கொலின் இங்ரம் அதிரடியாக ரன் குவித்தனர். இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷிகார் தவான் 43(36) கொலின் இங்ரம் 47(32) ரன்னில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் கீமோ பால் , அக்சர் படேல் ஒற்றை இலக்க ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ரிசப் பண்ட் தந்து ருத்ர தாண்டவ ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தார் . இவர் 78(27)* ரன்கள் குவித்ததால் டெல்லி கேப்பிடல் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக மிட்செல் மெக்லேனகன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ரோஹித் சர்மா , குவிண்டால் டிகாக் தொடக்க வீரராக களமிறங்கினர் . மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்க முதலே அதிர்ச்சி காத்திருந்தது . அணியின் ரன் 33 இருந்த போது மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 14 ரன்னில் இஷாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அடித்து ஆடிய குவிண்டால் டிகாக்_கும் நிலைத்து நிற்கவில்லை . 16 பந்தில் 27 ரன்கள் எடுத்த குவிண்டால் டிகாக் இஷாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து 3 விக்கெட்களை இழந்த மும்பை அணி வெற்றிக்காக போராடி வருகின்றது . அந்த அணியின் கைரன் பொலார்ட் பொறுப்புடன் ஆடி வந்த நிலையில் கீமோ பால் பந்து வீச்சில் 13 பந்தில் 21 ரன் எடுத்து ஆட்டமிழந்தார் . அதை தொடர்ந்து வந்த ஹர்டிக் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல் அக்ஷார் பட்டேல் பந்தில் ஆட்டமிழக்க மும்பை அணி தோல்வியை நோக்கி பயணிக்கிறது . அந்த அணியின் யுவராஜ்சிங் 32 (24)* , க்ரூநாள் பாண்டியா 8 (4)* களத்தில் உள்ளனர் . மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 107 ரன் எடுத்து தடுமாறி வருகின்றது . டெல்லி கேப்பிடல் அணி சார்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.