ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தில் கோஜ் வாடா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இர்ஷாத் அகமது மிர் என்பவர் வசித்து வருகிறார். இவர் முஸ்லிம் மதத்தின் புனித நூலாக கருதப்படும் திருக்குர்ஆனை தண்ணீரில் தூக்கி வீசியுள்ளார். இந்த தகவல் வெளியான உடனே சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்யும்படி காஷ்மீர் காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இரவோடு இரவாக இர்ஷாத் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் இர்ஷாதுக்கு சற்று மனநலம் சரியில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்நிலையில் திருக்குர்ஆனை அவமதித்ததன் காரணமாகத்தான் பல்வேறு இடங்களில் பயங்கரவாத குற்றங்கள் அரங்கேறியுள்ளது. ஒருவேளை காவல்துறையினர் திருக்குர்ஆனை அவமதித்த நபரை கைது செய்யாவிட்டால், பயங்கரவாதிகள் அட்டூழியம் செய்து விடுவார்கள் என்பதால் தான் உடனடியாக இர்ஷாத்தை கைது செய்யும்படி காவல் துறையினருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் திருக்குர்ஆனை தண்ணீரில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.