வேலூரில் வானத்தில் இருந்து மர்மப்பொருள் ஓன்று கீழே விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கே வி குப்பத்தை அடுத்த கவசம்பட்டு பகுதியில் திடீரென வானத்திலிருந்து இரவு நேரத்தில் ஒரு மர்ம பொருள்ஓன்று கீழே விழுந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். கீழே விழுந்த அந்த மர்ம பொருள் வெள்ளை நிறத்தில் இருந்தது. அதில் 2 எல்.ஈ.டி விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. இதையடுத்து அப்பகுதி மக்கள் கேவி குப்பம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து தகவலின்படி காவல் துறையினர் மற்றும் தடயவியல் வல்லுனர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த மர்ம பொருளை ஆய்வு செய்ததில் அது வெடிபொருள் அல்ல என்பது உறுதியாக தெரிந்தது. இந்த பொருள் வானிலை ஆய்வு சம்பந்தப்பட்ட ஒரு பொருள் என்று கூறிய காவல்துறையினர் இதனை முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் இப் பொருள் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்றும் வானிலிருந்து எப்படி கீழே விழுந்தது என்றும் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த மர்ம பொருள் குறித்து அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது