இன்று நம்முடைய திருநாட்டின் 73 _ஆவது சுதந்திர தினம் மிக சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடிடப்படுகின்றது. இதில் பல்வேறு தலைவர்கள் உயிர் நீத்தனர். பெண்கள் , ஆண்கள் என ஈடு இணையற்ற இழப்புகளை சந்தித்து தான் நாம் இந்த சுதந்திரத்தை பெற்றுள்ளோம். இந்திய சுதந்திர போராட்டம் ஒரு நீண்டகால வறலாற்று போராட்டம் இதில் கொடி காத்த திருப்பூர் குமரன் பற்றி பார்ப்போம்..
1904 ஆம் ஆண்டு குமாரசாமி பிறந்தார்.இவரே பின்னால் நாளில் நாம் அறிந்த குமரன் கொடி காத்த குமரன் என்று அழைக்கப்பட்டார். இவரின் குடும்பம் ஏழை நெசவாளி குடும்பம். இதனால் குமாரனால் 10 வயது வரை தான் கல்வி கற்க முடிந்தது. குடும்ப சுமை காரணமாக 10 வயதிலேயே வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டியிருந்தது. குமரன் நெசவு செய்து நெய்த துணிகளை வாரம் ஒருமுறை ஈரோடு கொண்டு சென்று ஜவுளி கடை உரிமையாளரிடம் கொடுத்து விட்டு அதற்கு உண்டான கூலியும் , அடுத்து நெய்வதற்கு நூலும் வாங்கி வருவார்.
ஒரு நாள் ஈரோட்டில் உள்ள கடையில் உரிமையாளர் நெய்த சேலைகளின் தரம் சரியில்லை என்று கூலியைக் குறைத்துக் கொடுத்தால் இதனை கண்டு கோபம் கொண்ட குமரன் இனி நெசவு செய்து கடை உரிமையாளர்களிடம் கொடுப்பதில்லை என்று முடிவு செய்தார்.1921_ஆம் வருடம் குமரனுக்கும் ராமாயம்மா ளுக்கும் திருமணம் நடைபெற்றது.
திருப்பூரில் இயங்கிய திருப்பூர் தேசபற்று வாலிபர் சங்கத்தில் உறுப்பினராகி தேச பணிகளில் ஈடுபட ஆரம்பித்தார் குமரன்.இந்நிலையில் தீபாவளி நெருங்கியது. அப்போதெல்லாம் பட்டாசு அந்நியப் பொருள் இப்போது தயாரிப்பது போல் சிவகாசியில் தயாரான பொருள் அல்ல. தேசப்பற்று வாலிபர் சங்கத்தின் திட்டத்தின் படி குமரன் காலையில் பட்டாசு கடை மறியல் , மாலையில் கள்ளுக்கடை மறியல் என்று செயல்பட்டார்.
10.01.1932_ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் போராட்டத்தில் பங்கு கொண்ட குமரன் ஊர்வலத்தில் தேசியக் கொடியை ஏந்தியபடி முன்னிலை வகித்து சென்றார். ஊர்வலம் சென்ற அந்த சாலையில் இருந்த காவலர்கள் குமரனின் தலையில் அடித்தனர்.ஆனால் இவ்வளவு அடிகள் விழுந்த போதும் அசையாது நின்ற குமரன் நினைவில்லாமல் மண்ணில் விழுந்தார். அந்நிலையிலும் அவர் வழக்கம் நமது தேசியக் கொடியை தரையில் விடாமல் உயிராக பற்றிக்கொண்டிருந்தார் குமரன்.
போராட்டத்தில் ஆங்கிலேயர்களால் அடிபட்டவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையிலேயே நினைவின்றி இருந்த குமரன் 11.01.1932_அன்று காலை குமரன் உடலில் சிறிது அசைவும் மெல்லிய குரல் ஓசையும் கேட்டது. அதில் சுயராஜ்யம் வராதா என்று கேட்டவாறே குமரன் உயிர் பிரிந்தது. கொடிகாத்தகுமரன் மீது கொடி போர்த்தப்பட்டது இத்தகைய வீரனின் உழைப்பால் கிடைத்தது தான் இந்த சுதந்திரம்.