Categories
உலக செய்திகள்

உலக வரைபடத்தில் கண்டறியப்பட்ட புதிய கடல்… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!!

உலக வரைபடத்தில் தென் பெருங்கடல் எனும் புதிய கடல் இருப்பதாக நேஷனல் ஜியாக்ரஃபிக் நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

புவியியல் சார்ந்த செய்தி நிறுவனமும், அமெரிக்காவை மையமாகக் கொண்ட தொலைக்காட்சியுமான நேஷனல் ஜியாக்ரஃபிக் நிறுவனம் சர்வதேச அளவில் நாடுகளுக்கு புதிய பெயர் வைக்கப்படுவதையும், கடல் மற்றும் புவியியல் சார்ந்த செய்திகளையும், மாற்றங்களையும் அதிகாரபூர்வமாக வெளியிட்டு வருகிறது. மேலும் இந்த நிறுவனமே அதிகாரபூர்வமான உலக வரைபடங்களையும் வெளியிட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் உலக கடல் தினமான ஜூன் 8-ஆம் தேதி அன்று தற்போது உலக வரைபடத்தில் தென் பெருங்கடல் எனும் கடல் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும் அண்டார்டிகா கண்டத்தில் இந்த தென் பெருங்கடல் இருப்பதாக நேஷனல் ஜோகிராஃபிக் நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. புவியியல் வல்லுநர்களும், கடல்சார் ஆராய்ச்சியாளர்களும் பல வருடங்களாக தென் பெருங்கடல் இருப்பதாக கூறி வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பினை நேஷனல் ஜியாக்ரஃபிக் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த தென் பெருங்கடல், கடற்பகுதியின் தெற்கே 60 டிகிரி அட்சரேகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதனுடைய எல்லையை காலநிலை மாற்றம் காரணமாக சரியாக வரையறுக்க முடியவில்லை என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆஸ்திரேலியா தங்கள் நாட்டிற்கு தெற்கே உள்ள கடற்பகுதி முழுவதையும் தென் பெருங்கடல் என்றே அழைக்கிறது. இதற்கிடையே பிரான்ஸ் சுற்றுச்சூழல் ஆய்வாளரான ஜீன் லூயிஸ் எட்டினே மிதக்கும் ஆராய்ச்சி கூடத்தை உருவாக்கி அதன் மூலம் தென் பெருங்கடலை ஆய்வு செய்ய போவதாக தெரிவித்துள்ளார். அந்த மிதக்கும் ஆராய்ச்சிக் கூடத்திற்கு போலார் பாட் என்றும் பெயர் வைத்துள்ளார். மேலும் மோட்டார் எதுவும் அந்த மிதக்கும் ஆராய்ச்சி கூடத்தில் பொருத்தப்படவில்லை, அது தானாகவே நீரில் மிதக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக ஜீன் லூயிஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால் 2024-ஆம் ஆண்டே இந்த மிதக்கும் ஆராய்ச்சி கூடம் முழுமை பெறும் என்று கூறியுள்ளார். இதற்கிடையே பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் இந்த தென் பெருங்கடலை ஆய்வு செய்வதற்காக நீரில் மிதக்கும் தன்மை கொண்ட 200 ரோபோக்களை கடலுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரோபோக்கள் தென் பெருங்கடலில் கார்பன் அளவு, உப்பு தன்மை, குளோரோஃபில் அளவு, ஆக்சிஜன் அளவு சுற்றுப்புறச் சூழல் என அனைத்தையும் ஆய்வு செய்யும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் தென் பெருங்கடலுக்கு சுற்றுலா பயணிகள் செல்வது அவ்வளவு சுலபமில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் புவியியல் வல்லுநர்கள் கப்பல் மூலம் பயணம் செய்து பெருங்குடலுக்கு சென்று விடலாம் என்று கூறியுள்ளனர். அதேசமயம் வழக்கத்துக்கு மாறாக கடலில் சிறிய அலைகளின் வீச்சு அதிகமாய் இருப்பதால் மயக்கம், வாந்தி உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படலாம் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |