Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்தறுப்பு… பெண் ஊழியரை தாக்கியவருக்கு போலீஸ் வலைவீச்சு..!!

கோவையில் ரயில் பெண் நிலைய மேலாளரை ஆஷா பிளேடு கொண்டு தாக்கிவிட்டு தப்பிச் சென்ற நபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கோவை ரயில் நிலையத்தில் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த அஞ்சனா நிவாஸ் என்ற பெண் கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். புதன்கிழமை இரவு அஞ்சனா நிவாஸ் பணியில் இருந்த போது நள்ளிரவு 1 மணி அளவில் அவரது அலுவலகத்திற்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். கையில் வைத்திருந்த ஆஷா ப்ளேடை கொண்டு அவரை தாக்கியுள்ளார்.

Image result for murder attempt

அப்போது நடந்த போராட்டத்தில் அஞ்சான் நிவாஸின் கழுத்து மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததும் மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.இதையடுத்து தாக்கப்பட்ட பெண் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மர்ம நபர் யார் என்ன காரணத்திற்காக தாக்கினார் என்று ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |