நீட் தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் சென்னை மருத்துவ கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவரின் தந்தையிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2018ல் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர் பீகாரில் இந்தி மொழியில் நீட் தேர்வு எழுதியுள்ளார். இந்தி தெரியாத மாணவர் பீகாரில் நீட்தேர்வு எழுதியதில் சந்தேகம் உள்ளதாக கல்லூரி முதல்வர் போலீசில் புகார் கொடுத்தார்.
சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் 2010 ஆம் ஆண்டில் பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரித்து வருகின்ற நிலையில் மோசடி , கூட்டுசதி ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.