Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

விலையை அதிகரித்த புதிய நிறுவனம் … கவலையில் மிதக்கும் வாடிக்கையாளர்கள் ..!!

இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

பஜாஜ் நிறுவனம் தனது வாகனங்களுக்கு புதிய விலையை நிர்ணயித்துள்ளது. அதன்படி பஜாஜ் பல்சர் சீரிஸில்  கிளாசிக் 150, பல்சர் 150 நியோன், 160 என்.எஸ்.,  200 என்.எஸ். மற்றும் 220 எஃப் போன்றவற்றின் விலை ரூ.4000 மாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பஜாஜின் அவெஞ்சர் சீரிஸ் மாடலில் ஸ்டிரீட் 160, குரூஸ் மற்றும் ஸ்டிரீட் 220 மாடல்களின் விலை ரூ.1000 மாக உயர்த்தியுள்ளது.

Image result for bajaj new bikes

இதுமட்டுமின்றி பஜாஜ் ஃபிளாக்‌ஷிப் மாடலான டாமினர் 400 விலையை ரூ. 10,000 வரை அதிகரிக்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக,  இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து பஜாஜ் டாமினர் மடலின் விலை இதுவரை இரண்டாவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த பஜாஜ் டாமினர்400 விலை ரூ. 1.74 லட்சம் விலை எனஅந்நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது இந்த  பஜாஜ் டாமினர் 400 விலை ரூ. 1.90 லட்சம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Image result for bajaj new bikes

மேலும், பஜாஜ் நிறுவனத்தின் விலை மாற்றம் தவிர மோட்டார் சைக்கிள்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த புதிய விலை மாற்றம் நாடு முழுக்க உடனடியாக அமலாகியுள்ளது. இதில் குறிப்பாக பஜாஜ் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ள என்ட்ரி லெவல் பல்சர் 125 மாடலின் விலையில் மட்டும் மாற்றம் செய்யாமல் இருக்கிறது.

Categories

Tech |