சீனாவில் உள்ள உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 வருடங்களாக பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்ட நிலையில், தற்போது தடுப்பூசியின் காரணமாக தொற்றின் தாக்கம் ஓரளவு குறைந்து மக்களின் இயல்பு வாழ்க்கையானது திரும்பியுள்ளது. இருப்பினும் ஒமைக்ரான் போன்ற உருமாறிய வைரஸ் தொற்றுகள் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது.
சீனாவில் மீண்டும் புதிய வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்றின் காரணமாக ஒரே நாளில் 31,354 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதன் காரணமாக ஊரடங்கு, பயண கட்டுப்பாடுகள், பெரிய அளவில் சோதனை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் சீனாவில் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் மீண்டும் உலக நாடுகளுக்கும் பரவுமோ என்ற அச்சம் நிலவுகிறது. மேலும் மீண்டும் கொரனா வைரஸ் பரவினால் பொது முடக்கம் மற்றும் வீட்டில் இருநது வேலை போன்ற கட்டுப்பாடுகள் வருமோ என்று உலக நாடுகள் அச்சப்படுகிறது..