RC 125 மாடலில் டியூக் 125 மாடலில் உள்ளதை போன்று 124.7 CC சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 14.3 PHP 9250 RPM மற்றும் 12 என்.எம். டார்க் 8000 RPM செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனை கொண்டுள்ளது. இந்த பைக்கின் முன்புறம் WP அப்சைடு-டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
பிரேக்கை பொருத்தவரை முன்புறம் 300 MM டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறம் 230 MM டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த RC 125 மாடலில் சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 17-இன்ச் கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. இந்தியாவில் KTM RC 125 விலை ரூ.1.4 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் எனறு தெரியவருகிறது. இது யமஹா R 15 V3 மாடலுக்கு போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.