காஸ்கஞ்ச் மாவட்டம் பாட்டியாலி கோட்வாலி என்ற பகுதியில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தின் பாட்டியாலி கோட்வாலி என்ற பகுதியில் திருமணமான இளம்பெண் ஒருவர் திருமணமானதும் பண்ணைக்கு வேலைக்கு சென்றபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் போலீசாரிடம் அளித்த புகாரில், “எனக்கு புதிதாக திருமணம் ஆகியுள்ளது. நான் ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் எனது மாமியார் வீட்டிற்கு சென்றேன்.
அங்கு மறு நாள் திங்கள் கிழமை மாலையில் பண்ணைக்கு வேலை பார்க்க சென்றேன். அப்போது அங்கிருந்த பண்ணையார் சந்திர பால் என்பவர் என்னை வலுக்கட்டாயமாக கட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இதையடுத்து நான் வீட்டிற்கு சென்று எனது குடும்பத்தாரிடம் நடந்தவற்றை தெரிவித்தேன்” என்று கூறினார்.
அந்த பெண்ணின் தந்தை பெண்ணுடன் வந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பின்னர் குற்றவாளியான பண்ணையார் சந்திரபால் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் அவரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.