செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், ஆன்லைன் ரம்மியால் நாமக்கல்லில் இப்படி தான் தற்கொலைன்னு சொன்னாங்க. நான் போலீஸ் ஸ்டேஷன் ஆள் அனுப்பி கேட்டா… அவன் குடும்பத்தகராறு தற்கொலை பண்ணி செத்து இருக்கான். செய்தில வருது ரம்மியில் விளையாடி என்று…. எதுக்காக கடன் வாங்கினானு தெரியாது ? ரம்மி விளையாட கடன் வாங்கினானா ? வாழ்க்கையை நடத்துவதற்கு கடன் வாங்குனா ? என தெரியாது. இப்போ எல்லாமே இருக்குங்க.
உலகமே விரிஞ்சி கிடக்கு. இப்போ ஆன்லைன்ல கிரிக்கெட்டும் சூதாட்டம் தான், எல்லாமே சூதாட்டம் தான். எல்லாரும் அதுல தானே விளையாட்டுகிறார்கள்.நான் நடிக்கும் போது திங்க் பண்ணி நடிக்கல. ரம்மி விளையாடுவது அறிவுபூர்வமான விளையாட்டு. உங்களுக்கு விளையாட தெரியுமா ? என்று தெரியாது. ரம்மி விளையாடுறது அவ்வளவு ஈஸியா போய் விளையாட முடியாது. சரத்குமார் நடிச்சதனால் சொல்லல. ரம்மி விளையாடுவதற்கு இன்டெலிஜென்ஸ் வேணும்.
எல்லாமே சூதாட்டம் தான். கிரிக்கெட்டே சூதாட்டம் தான். வேர்ல்ட் கப் மேட்ச் ஃபிக்ஸ்ஸிங் என சொல்லுறாங்க. நான் பிரேசில் தோற்றதும் மனசு கஷ்டப்பட்டு உடைச்சு போய் இருந்தேன். அது ஒரு விளையாட்டு என்று பார்க்கிறதிலேயே… இவங்க ஜெயிப்பாங்களா ? அவங்க ஜெயிப்பாங்களா ? இதுதானே நடந்திட்டு இருக்கு. எல்லாருமே அதை வைத்து சூதாடுறாங்க. பொருளாதார அடிப்படையில் வேகமாக உயர வேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள் என்று நினைக்கின்றேன்.நாம் இது வேண்டாம்னு நெனச்சா யாரும் அதுக்குள்ள போகமாட்டாங்க என தெரிவித்தார்.