ஒரு பெண்ணாக, பொதுவாழ்வில் பல உயரங்களை எட்டி, தனக்கு கிடைத்த பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி பெருமை சேர்த்தவர் சுஷ்மா சுவராஜ் என்று ஸ்டாலின் புகழ்ந்துள்ளார்
முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (67 வயது) பாஜகவை சேர்ந்தவர். 7 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இந்திரா காந்திக்கு பிறகு 2-ஆவது பெண் வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆவார். இவர் 3 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், 4 முறை மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். கடந்த ஆண்டு சுஷ்மா சுவராஜ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நேற்று இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. இவரது மறைவால் பாஜக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் மாநில அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னணி தலைவருமான திருமதி.சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. ஒரு பெண்ணாக, பொதுவாழ்வில் பல உயரங்களை எட்டி, தனக்கு கிடைத்த பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி பெருமை சேர்த்தவர் என்று புகழ்ந்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும்,பாரதிய ஜனதா கட்சியின் முன்னணி தலைவருமான திருமதி.சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
ஒரு பெண்ணாக, பொதுவாழ்வில் பல உயரங்களை எட்டி, தனக்கு கிடைத்த பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி பெருமை சேர்த்தவர் #SushmaSwaraj
— M.K.Stalin (@mkstalin) August 6, 2019